பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
அருளிச் செய்த
இரண்டாம் மண்டலமாகிய
திருவலங்கற்றிரட்டு
( முதற் கண்டம் )
வினாவுத்தரம் - நேரிசைவெண்பா
பின்னையின்பே ராவதெது பீட்டின்சொல் லென்பழகி
யென்னுமொழி யென்கவரி யேந்திமிக்கார் - முன்னசைத்தே
உய்பவனை யேவுரையா தோஞ்சேய்பண் ணூலெனுரை
செய்திருவ லங்கற் றிரட்டு.
நேரிசை வெண்பா
பதக்கண்டா பண்பா வலங்கற் றிரட்டின்
முதற்கண்டம் பாடு முருகோன் - பதக்கண்டாம்
இன்புனது கண்ணுறுமா றேதி லருணோக்கும்
அன்பருநின் முன்வருகு வார் --காசியாத்திரை
காப்பு
குறள் வெண்பா
பொன்னாரந் துன்னும் புயத்தானை மாமுகவன்
பின்னோ னிதற்கருள் காப்பே. 1
கோளின் புகழ்க்கயிலைக் கோன்முருகை யேத்தவென்
தோளுங் கடம்புந் துணை. 2
அஞ்ஞத்வம் வீடற் கலங்கற் றிரட்டாற்ற
மஞ்ஞையிவர் வோன்காக்க வந்து. 3
வள்ளல்சே யின்றாளை வாழ்த்தவருட் டெய்வானை
வள்ளியுங் காக்கவே வந்து. 4
அயில்வேலன் மேனானு மாற்றுந் துதிக்கேர்
மயில்சேவ லுங்காக்க வந்து. 5
சுகநிலையைச் சூழ்ந்து சொலற்குச் சுரேசன்
மகிழ்வொடுங் காக்கவே வந்து. 6
நற்றா டொழக்கூட னாரிக் கிளமுருகாய்
உற்றோ னருள்வா னுவந்து. 7
அருளா ரடிபோற்று மன்பர்க் கருள்சேய்
அருளே நமக்காதிக் கம். 8
ஒப்புவமை யில்லாமெய் யுற்றவடி வேலாசிங்
கெப் படியும் வந்தாளு மே. 9
குமரகுருதானே கொடுக்குமென லங்கால்
குமரகுரு தாசன் குறிப்பு. 10
ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் சாக்ஷாது பரப்பிரமமென்பதை உணர்ந்து, அத்தகைய பரம்பொருளது
திருவருணெறி நின்று பாடியருளிய இத்திருப்பாடல்களி லெதனையேனு மன்போடு அக்கடவுள்
சன்னிதியிலேனும் மற்ற விடங்களிலேனும் பாடித் துதிப்பார்க்குப் பாவநாசம், ரோகநாசம்,
சத்துருநாசம், ஆயுள்விருத்தி, தைரியவிருத்தி, வித்தைவிருத்தி, புண்ணியவிருத்தி,புத்திரவிருத்தி
யுண்டாம் அன்றிச் சர்வார்த்த சித்தியுமுத்தியும் வாய்க்கு மென்றலும் வாய்மை.
No comments:
Post a Comment