ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய
பத்துப்பிரபந்தம்
******************************************************
பிறிதுபடுதுவிதபங்கி
நேரிசை வெண்பா
கட்டங்கா வென்றுதிகொள் காதாகைக் தண்டாமா
மட்டங்கால் சாதமலர் வண்டாளா - வட்டம்பூண்
மாதுமையாண் மைந்தாவை வாரயிலா விட்டந்தா
வேதுதுமி யேகண்டா டீ.
கண்டாடீ கட்டங்கா வென்றுதிகொள் காதாகைத்
தண்டாமா மட்டங்கால் சாதமலர் - வண்டாளா
வட்டம்பூண் மாதுமையாண் மைந்தாவை வாரயிலா
விட்டந்தா வேதுதுமி யே.
_____________________
பிறிதுபடுதிரிபங்கி
நேரிசை வெண்பா.
பத்துப்பா மேலாமோர் பாவோன் வரதாபல்
வித்துப்பார் மாலாம் விரகிலருன் - மத்தத்தா
வேலா மராமுடியா வெய்யமலா பத்தைத்தீர்
சீலா பராபரசீர் செய்.
பரசீர்செய் பத்துப்பா மேலாமோர் பாவோன்
வரதாபல் வித்துப்பார் மாலாம் - விரகிலருன்
மத்தத்தா வேலா மராமுடியா வெய்யமலா
பத்தைத்தீர் சீலா பரா.
மேலாமோர் பாவோன் வரதாபல் வித்துப்பார்
மாலாம் விரகிலருன் மத்தத்தா - வேலா
மராமுடியா வெய்யமலா பத்தைத்தீர் சீலா
பராபரசீர் செய்பத்துப் பா.
____________________________
பிறிதுபடுபாட்டுப் பிரபந்தம்.
கட்டளைக்கலித்துறை.
1. ஓமய வேலவ னோய்வறு சீர்த்திய னோமவுன
சீமய வுத்தமர் நாதன் மயின்மிசைச் செல்லிளைஞன்
கோமய மின்னிய வீடேறு மிட்டர் குரவனென
தாமய வீறிறு மாறன கானந்த மார்கவன்றே.
நேரிசையாசிரியப்பா
ஓமய வேலவ னோய்வறு சீர்த்திய
னோமவு னசீமய வுத்தமர் நாதன்
மயின்மிசைச் செல்லிளை ஞன்கோ மயமின்
னியவீ டேறு மிட்டர் குரவ
னெனதா மயவீ றிறுமா
றனகா னந்த மார்க வன்றே.
_________________________________
கட்டளைக்கலித்துறை.
2. வாளவிர் தண்முக வள்ளி மணாளன்வில் வாளுடைய
கோளவிர் வஞ்சரைத் தேய்த்த பொருநன் குருகில்வரு
தாளவிர் தேமுரு கோன்வேலன் முத்தன் சரதநிறை
கேளவிர் கானித முங்குறை யாக்கொன்னர் கேட்குமின்பே.
நேரிசையாசிரியப்பா.
வாளவிர் தண்முக வள்ளி மணாளன்வில்
வாளுடைய கோளவிர் வஞ்சரைத் தேய்த்த
பொருநன் குருகில் வருதா ளவிர்தே
முருகோன் வேலன் முத்தன் சரத
நிறைகே ளவிர்கா னிதமுங்
குறையாக் கொன்னர் கேட்கு மின்பே.
___________________________
நேரிசைவெண்பா
3. மாண்டாங்கும் வேலா மலர்குவளை மார்பாவாண்
டாண்டுதோ றுங்குறை யாதவத்தம் - வேண்டான்ற
கொன்பேண் விபுத குருவேநோய் தாண்டாண்மை
யின்பே தரவருதி யின்று.
கலிவிருத்தம். காய் மா காய் மா .
மாண்டாங்கும் வேலா மலர்குவளை மார்பா
வாண்டாண்டு தோறுங் குறையாத வத்தம்
வேண்டான்ற கொன்பேண் விபுதகுரு வேநோய்
தாண்டாண்மை யின்பே தரவருதி யின்று.
_________________________
நேரிசைவெண்பா.
4. பாட்டாத்த சேந்தா பகலெவையு நீதானாட்
டாட்டமரு ளென்றறி யார்வுகொள்ளென் - கூட்டாக்கை
நோய்தான் குலைய நுனியாது பீட்டாக்க
வாய்தான் பெருகவருள் வந்து.
கலிவிருத்தம். காய் மா காய் மா .
பாட்டாத்த சேந்தா பகலெவையு நீதா
னாட்டாட்ட மருளென் றறியார்வு கொள்ளென்
கூட்டாக்கை நோய்தான் குலையநுனி யாது
பீட்டாக்க வாய்தான் பெருகவருள் வந்து.
______________________________
கலிவிருத்தம்.
5. மாடுடைமா டிவரொருவன் மாவடிவோ டுலவோர்
பீடுடையா னயிலவன்மண் ணோர்பெருமான் மனமாம்
வீடுடைவிண் ணவனிமலன் வீரனடிக் களிசெய்
பாடுடையார் திருவினுய்வர் பாதமுற்றுய் குவரே.
நேரிசையாசிரிப்பா.
மாடுடை மாடிவ ரொருவன் மாவடி
வோடுல வோர்பீ டுடையா னயிலவன்
மண்ணோர் பெருமான் மனமாம் வீடுடை
விண்ணவ னிமலன் வீர னடிக்களி
செய்பா டுடையார் திருவி
னுய்வர் பாத முற்றுய் குவரே.
கட்டளைக்கலித்துறை.
மாடுடை மாடி வரொருவன் மாவடி வோடுலவோர்
பீடுடை யான யிலவன்மண் ணோர்பெரு மான்மனமாம்
வீடுடை விண்ண வனிமலன் வீர னடிக்களிசெய்
பாடுடை யார்தி ருவினுய்வர் பாதமுற் றுய்குவரே.
___________________________
கலிவிருத்தம்.
6. மாலணைமான் மருகனுயர் மாதவர்நூ லவர்தே
வாலணைவே ணுவலருமெய் யாளனிறா மழவன்
வேலணைகை யழகனறை வீசடிக்கன் புளர்வன்
னீலணையா மதியினன்னர் நீடுநன்குய் குவரே.
நேரிசையாசிரியப்பா.
மாலணை மான்ம ருகனுயர் மாதவர்
நூலவர் தேவா லணைவே ணுவலரு
மெய்யா ளனிறா மழவன் வேலணை
கையழ கனறை வீசடிக் கன்புளர்
வன்னீ லணையா மதியி
னன்னர் நீடு நன்குய் குவரே.
கட்டளைக்கலித்துறை.
மாலணை மான்ம ருகனுயர் மாதவர் நூலவர்தே
வாலணை வேணு வலருமெய் யாள னிறாமழவன்
வேலணை கைய ழகனறை வீசடிக் கன்புளர்வன்
னீலணை யாம தியினன்னர் நீடுநன் குய்குவரே.
_______________________
கலிநிலைத்துறை.
தானனந் தானந்த தானதனா தந்த தானதனா.
7. வேரியஞ் சேரிண்டை வேய் சுரனே தொங்கன் மீதுறுமோர்
சூரியன் போல்வென்றி வேலரசே துன்பு சூலருளீ
யாரியந் தாவிஞ்சு சீர்பரமே யென்றுள் கார்வெழமா
பாரியண் டாதுந்த வாவிரவாய் வண்டில் பாவலனே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
தனனா தந்த தானதனா தான தந்தா தந்தனா.
சுரனே தொங்கன் மீதுறுமோர் சூரியன் போல்வென்றிவே
லரசே துன்பு சூலருளீ யாரி யந்தா விஞ்சுசீர்
பரமே யென்றுள் கார்வெழமா பாரியண் டாதுந்தவா
விரவாய் வண்டில் பாவலனே வேரி யஞ்சே ரிண்டைவேய்.
கட்டளைக்கலித்துறை.
வேரியஞ் சேரிண்டை வேய்சுர னேதொங்கன் மீதுறுமோர்
சூரியன் போல்வென்றி வேலர சேதுன்பு சூலருளீ
யாரியந் தாவிஞ்சு சீர்பர மேயென்றுள் கார்வெழமா
பாரியண் டாதுந்த வாவிர வாய்வண்டில் பாவலனே.
நேரிசையாசிரியப்பா.
[ இதழ்குவிக்கு முயிரெழுத்து மெய்யெழுத்துந்
தீண்டாமற்பாடும் ] நிரோட்டகம்.
8. நாரிணை நெஞ்சினர் நாயக னெஃகின
னாரியரி சீரிணை தங்கையெ னல்லா
டனதிளஞ் சேய்செறி தண்டா ரிணைசெங்
கனலா தார கண்டன் சகல
கலையே ரிணைகா னினையா
ரலலே யெய்த லாணை யன்றே.
கட்டளைக்கலித்துறை.
நாரிணை நெஞ்சினர் நாயக னெஃகின னாரியரி
சீரிணை தங்கையெ னல்லா டனதிளஞ் சேய்செறிதண்
டாரிணை செங்கன லாதார கண்டன் சகலகலை
யேரிணை கானினை யாரல லேயெய்த லாணையன்றே.
நேரிசையாசிரியப்பா.
[ மேற்படி ] நிரோட்டகம்.
9. ஆறணி செஞ்சடை யந்தண னந்தன
னாறிடத் தனீறணி யாக்கையர் நேயன்
சிகண்டிய னித்தியன் செஞ்சே றணிநச்
சகந்தேர்ந் தீயெ னாதி திறத்தண்
ணளியே றணிசார் தகையார்
களியேய் நெஞ்சக் கந்த னெஞ்சே.
கட்டளைக்கலித்துறை.
ஆறணி செஞ்சடை யந்தண னந்தன னாறிடத்த
னீறணி யாக்கையர் நேயன் சிகண்டிய னித்தியன்செஞ்
சேறணி நச்சகந் தேர்ந்தீயெ னாதி திறத்தண்ணளி
யேறணி சார்தகை யார்களி யேய்நெஞ்சக் கந்தனெஞ்சே.
வெண்கலிப்பா.
[ மேற்படி ] நிரோட்டகம்.
10. தனநிறை தெரியறரி தகையணெறி யரசிகன
னனிநிகழ் நயனனிச நறியகதி கணினையென
தினியரி கனெடிலயி லிறையடியி னததரணை
நனரளி செயினியைத னயன்.
கலிநிலைத்துறை.
தனதன தனன தனதன தனன தனன.
தனநிறை தெரிய றரிதகை யணெறி யரசி
கனனனி நிகழ்ந யனனிச நறிய கதிக
ணினையென தினிய ரிகனெடி லயிலி றையடி
யின தத ரணைந னரளிசெ யினியை தனயன்.
கலிவிருத்தம்
தனனதனன தனன தனனதன தனன.
தனநிறைதெரி யறரி தகையணெறி யரசி
கனனனிநிகழ் நயன னிசநறிய கதிக
ணினையெனதினி யரிக னெடிலயிலி றையடி
யினததரணை நனர ளிசெயினியை தனயன்.
வெண்கலிப்பா
11. நயமுள புதுநறவு கமழடியி னவையிறய
வியல்பெனை யுறவெணுக வினிமைதரு கவெயினக
ரயனரி வெருவவெழு கிரியதுபெ யரனடிக
ளுயரரி சுதைபிரிய முளன்.
கலிநிலைத்துறை.
தனதன தனன தனதன தனன தனன
நயமுள புதுந றவுகம ழடியி னவையி
றயவியல் பெனையு றவெணுக வினிமை தருக
வெயினக ரயன ரிவெருவ வெழுகி ரியது
பெயரன டிகளு யரரிசு தைபிரி யமுளன்.
கலிவிருத்தம்.
தனன தனன தனன தனனதன தனன.
நயமுளபுது நறவு கமழடியி னவையி
றயவியல்பெனை யுறவெ ணுகவினிமை தருக
வெயினகரய னரிவெ ருவவெழுகி ரியது
பெயரனடிக ளுயர ரிசுதைபிரி யமுளன்.
பிறிதுபடுபாட்டுப் பிரபந்தம் முற்றிற்று.
_________________________________________________________
ஐந்தந்தாதியெனும்
படுபஞ்சகம்.
1. கட்டளைக்கலித்துறை.
சிவகந்தன் சீர்மயின் மேற்றிகழ் செய்யுந் தினமதொன்றி
வைகண்டஞ் சூழினன் றானமின் விஞ்சொண் ணகையி தென்னென்
கவலொன்றுங் காலவற் குட்கதி ரென்முக் கணிறையெஞ்சே
யவனங்கங் காணதென் றானரி வந்தித் தனனெழுந்தே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
புளிமாங்காய் தேமா தேமா புளிமாங்காய் புளிமா தேமா.
சிவகந்தன் சீர்ம யின்மேற் றிகழ்செய்யுந் தினம தொன்றி
வைகண்டஞ் சூழி னன்றா னமின்விஞ்சொண் ணகையி தென்னென்
கவலொன்றுங் கால வற்குட் கதிரென்முக் கணிறை யெஞ்சே
யவனங்கங் காண தென்றா னரிவந்தித் தனனெ ழுந்தே.
புளிமா தேமா புளிமா, புளிமா கூவிளங்காய் தேமா.
சிவகந் தன்சீர் மயின்மேற் றிகழ்செய் யுந்தினம தொன்றி
வைகண் டஞ்சூ ழினன்றா னமின்விஞ் சொண்ணகையி தென்னென்
கவலொன் றுங்கா லவற்குட் கதிரென் முக்கணிறை யெஞ்சே
யவனங் கங்கா ணதென்றா னரிவந் தித்தனனெ ழுந்தே.
தரவுகொச்சகக்கலிப்பா.
புளிமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்.
சிவகந்தன் சீர்மயின்மேற் றிகழ்செய்யுந் தினமதொன்றி
வைகண்டஞ் சூழினன்றா னமின்விஞ்சொண் ணகையிதென்னென்
கவலொன்றுங் காலவற்குட் கதிரென்முக் கணிறையெஞ்சே
யவனங்கங் காணதென்றா னரிவந்தித் தனனெழுந்தே.
கலிநிலைத்துறை. பண் - நட்டராகம்
புளிமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் புளிமா தேமா.
சிவகந்தன் சீர்மயின்மேற் றிகழ்செய்யுந் தினம தொன்றி
வைகண்டஞ் சூழினன்றா னமின்விஞ்சொண் ணகையி தென்னென்
கவலொன்றுங் காலவற்குட் கதிரென்முக் கணிறை யெஞ்சே
யவனங்கங் காணதென்றா னரிவந்தித் தனனெ ழுந்தே.
__________________________
2. கட்டளைக்கலித்துறை.
தேனார் சுமன்முரு கோன்மயி லேறச் சிகிதிகழ்தன்
வானார் குரல்கொடு மூடிட வேனிவ் வணமெனவேள்
கானார் வெயின்மரு வாவண மென்னக் கதிரயிலோ
னானார் பரன்மதி யென்றுதை யிட்டா ன னிசெலவே.
கலிவிருத்தம்.
தேமாங்கனி புளிமாங்கனி தேமாங்கனி புளிமா.
தேனார் சுமன் முருகோன்மயி லேறச்சிகி திகழ்தன்
வானார்குரல் கொடுமூடிட வேனிவ்வண மெனவேள்
கானார்வெயின் மருவாவண மென்னக்கதி ரயிலோ
னானார்பரன் மதியென்றுதை யிட்டானனி செலவே.
தரவுகொச்சகக்கலிப்பா.
தேமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்.
தேனார்சு மன்முருகோன் மயிலேறச் சிகிதிகழ்தன்
வானார்கு ரல்கொடுமூ டிடவேனிவ் வணமெனவேள்
கானார்வெ யின்மருவா வணமென்னக் கதிரயிலோ
னானார்ப ரன்மதியென் றுதையிட்டா னனிசெலவே.
கலிநிலைத்துறை. பண் - நட்டராகம்.
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளம் புளிமா.
தேனார் சுமன்முரு கோன்மயிலே றச்சிகி திகழ்தன்
வானார் குரல்கொடு மூடிடவே னிவ்வண மெனவேள்
கானார் வெயின்மரு வாவணமென் னக்கதி ரயிலோ
னானார் பரன்மதி யென்றுதையிட் டானனி செலவே.
___________________________________
3. கட்டளைக்கலித்துறை.
செலவுதிப் பில்கந்த வண்ணல் சிலம்பருஞ் செல்வத்தரேய்
நலவடிக் கண்மன்னு மெங்க ணலங்கொனென் றுள்விம்முமா
விலகரைக் கண்மன்ன னெய்தை யெனுங்கொலங் கண்மல்குபூ
ணலருரத் தின்மத்த கத்துள வுஞ்சொலும் மவ்வண்ணமே.
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
புளிமா தேமா தேமா தேமா புளிமா தேமா கூவிளம்.
செலவு திப்பில் கந்த வண்ணல் சிலம்ப ருஞ்செல் வத்தரேய்
நலவடிக் கண்மன்னு மெங்க ணலங்கொனென் றுள்விம்முமா
விலகரைக் கண்மன்ன னெய்தை யெனுங்கொலங் கண்மல்குபூ
ணலருரத் தின்மத்த கத்துள வுஞ்சொலும் மவ்வண்ணமே.
தரவுகொச்சகக்கலிப்பா.
கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளம்.
செலவுதிப்பில் கந்தவண்ணல் சிலம்பருஞ்செல் வத்தரேய்
நலவடிக்கண் மன்னுமெங்க ணலங்கொனென்றுள் விம்முமா
விலகரைக்கண் மன்னனெய்தை யெனுங்கொலங்கண் மல்குபூ
ணலருரத்தின் மத்தகத்து ளவுஞ்சொலும்மவ் வண்ணமே.
கலிநிலைத்துறை. பண் - நட்டராகம்
கருவிளம் தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்கனி.
செலவுதிப் பில்கந்த வண்ணல் சிலம்பருஞ் செல்வத்தரேய்
நலவடிக் கண்மன்னு மெங்க ணலங்கொனென் றுள்விம்முமா
விலகரைக் கண்மன்ன னெய்தை யெனுங்கொலங் கண்மல்குபூ
ணலருரத் தின்மத்த கத்து ளவுஞ்சொலும் மவ்வண்ணமே.
__________________________________________
4. கட்டளைக்கலித்துறை.
வண்ணந் திகழுந் திருமால்வண் போதயன் வாழ்வினையா
டிண்ணங் கெழுசிங் கனையான்றின் றேனெனுஞ் சேயொளிர்கை
யண்ணம் பெறுவச் சிரம்வேலன் னோனர சாருயிரை
யுண்ணென் றிறநன் றெனுமாலொண் டேவரு முட்குறவே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
தேமா புளிமா புளிமா தேமா புளிமா புளிமா
வண்ணந் திகழுந் திருமால் வண்போ தயன்வாழ் வினையா
டிண்ணங் கெழுசிங் கனையான் றின்றே னெனுஞ்சே யொளிர்கை
யண்ணம் பெறுவச் சிரம்வே லன்னோ னரசா ருயிரை
யுண்ணென் றிறநன் றெனுமா லொண்டே வருமுட் குறவே.
கலிவிருத்தம்.
தேமாங்கனி கூவிளங்காய் தேமாங்கனி கூவிளங்காய்.
வண்ணந்திக ழுந்திருமால் வண்போதயன் வாழ்வினையா
டிண்ணங்கெழு சிங்கனையான் றின்றேனெனுஞ் சேயொளிர்கை
யண்ணம் பெறு வச்சிரம்வே லன்னோனர சாருயிரை
யுண்ணென்றிற நன்றெனுமா லொண்டேவரு முட்குறவே.
கலிநிலைத்துறை. பண் - நட்டராகம்.
தேமா புளிமாங்கனி தேமா கூவிளம் கூவிளங்காய்.
வண்ணந் திகழுந்திரு மால்வண் போதயன் வாழ்வினையா
டிண்ணங் கெழுசிங்கனை யான்றின் றேனெனுஞ் சேயொளிர்கை
யண்ணம் பெறுவச்சிரம் வேலன் னோனர சாருயிரை
யுண்ணென் றிறநன்றெனு மாலொண் டேவரு முட்குறவே.
______________________________________
5. கட்டளைக்கலித்துறை.
குறமக டன்னகஞ் சேர்ந்தகொன் னேறு குகனயிலோன்
விறவரு ணன்கரப் பூஞ்செண்டம் மார்பு விரையணிபார்த்
தறவளை பன்னகம் போன்றதென் னென்ன வதுவெலிபோற்
சிறுகுற லென்னெனப் போகிலார்ப் புற்ற சிவணியவே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
கருவிளம் கூவிளம் தேமா தேமா புளிமா புளிமா.
குறமக டன்னகஞ் சேர்ந்த கொன்னே றுகுக னயிலோன்
விறவரு ணன்கரப் பூஞ்செண் டம்மார் புவிரை யணிபார்த்
தறவளை பன்னகம் போன்ற தென்னென் னவது வெலிபோற்
சிறுகுற லென்னெனப் போகி லார்ப்புற் றசிவ ணியவே.
தரவுகொச்சகக்கலிப்பா.
கருவிளங்காய் புளிமாங்காய் தேமாங்காய் கருவிளங்காய்.
குறமகடன் னகஞ்சேர்ந்த கொன்னேறு குகனயிலோன்
விறவருணன் கரப்பூஞ்செண் டம்மார்பு விரையணிபார்த்
தறவளைபன் னகம்போன்ற தென்னென்ன வதுவெலிபோற்
சிறுகுறலென் னெனப்போகி லார்ப்புற்ற சிவணியவே.
கலிநிலைத்துறை. பண் - நட்டராகம்.
கருவிளம் தேமா தேமாங்காய் தேமாங்காய் கருவிளங்காய்.
குறமக டன்ன கஞ்சேர்ந்த கொன்னேறு குகனயிலோன்
விறவரு ணன்க ரப்பூஞ்செண் டம்மார்பு விரையணிபார்த்
தறவளை பன்ன கம்போன்ற தென்னென்ன வதுவெலிபோற்
சிறுகுற லென்னெ னப்போகி லார்ப்புற்ற சிவணியவே.
பகுபடுபஞ்சகம் முற்றுற்றன.
---------------------------------------------------------------------------------
தங்க ஆனந்தக் களிப்பு
குமரகுருபரன் றிருவடி வாழ்க

No comments:
Post a Comment